ஜெர்மன் அதிகாரிகள் நாஜி முறைகளை கடைப்பிடிப்பதாக துருக்கி அதிபர் கூறிய குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு

ஜெர்மனிய அதிகாரிகள் நாஜி நடைமுறைகளை கடைபிடிப்பதாக, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறிய குற்றச்சாட்டை ஜெர்மனிய அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

எர்துவானின் அந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜெர்மனியில் உள்ள துருக்கி வாக்காளர்களுக்கு மத்தியில் துருக்கி அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான ஆதரவு திரட்டும் பிரசார பேரணிகள், பல நகரங்களில் ரத்து செய்யப்பட்டன.

"எர்துவான் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள வழி தெரியாமல் அடம்பிடிக்கும் குழந்தை போல்" நடந்து கொள்வதாக சான்செலர் ஏங்கலா மெர்கலின் கிறித்துவ ஜனநாயக யூனியனின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள சுமார் 1.5 மில்லியன் துருக்கியர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய தலைப்புகள்