பாகிஸ்தானில் சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு வெற்றிகரமாக நடந்த பெரிய கிரிக்கெட் போட்டி

  • 6 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கடாஃபி மைதானத்திற்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் சிப்பாய்கள்

பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடைபெற்ற 20-20 சூப்பர் லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தை காண பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர்; இதன்மூலம் அந்நாட்டில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி ஒன்று, ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பிறகு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை கொண்டு பாகிஸ்தானால் பாதுகாப்பாக கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தும் என ஒருங்கிணைப்பாளர்கள் நம்புகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆயிரக்கணக்கான போலிஸார் மற்றும் படைகள் கடாஃபி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; மேலும் மாநிலத்தின் தலைமை அதிகாரிகள் மைதானத்திற்கு விஜயம் செய்ததால் அவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

இந்த மைதானத்தின் வெளியேதான் எட்டு வருடங்களுக்கு முன்னர், இலங்கையை சேர்ந்த வீரர்கள் இருந்த பேருந்தின் மீது இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் பெரும் சரிவை சந்தித்தது

அந்த சம்பவத்தில் எட்டு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்