டுடெர்டேவுக்காக சுமார் 200 பேரை கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒப்புதல்

அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே நகர மேயராக இருந்தபோது, அவரோடு தொடர்புடைய ஒரு கொலைப்படையின் பகுதியாக சுமார் 200 பேரை தான் கொலை செய்துள்ளதாக பிலிப்பைன்ஸின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption நாட்டை காக்கும் வகையில் செயல்படுவதாக டுடெர்டே கூறுகிறார்

டுடெர்டே டவாவ்வில் பணிப்பொறுப்பில் இருந்தபோது, அவருக்காக கொலை செய்ததை அர்டுரோ லஸ்கானாஸ் முதலில் மறுத்துவிட்டார்.

ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிலிப்பைன்ஸ் சென்ட் அவையின் விசாரணையின்போது, லஸ்கான்ஸ் தன்னுடைய சாட்சியத்தை மாற்றி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆயிரக்கணக்கானோரின் இறப்புக்கு காரணமான டுடெர்டேயின் போதைமருந்து ஒழிப்புக்கு எதிராக போராட்டம்

தன்னுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு உயிராபத்து வரும் என்று அஞ்சியே முதலில் பொய் கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டவை என்று டுடெர்டெயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இன்னொரு சாட்சியும் இதே போன்ற சாட்சியத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்