படுகொலை விவகாரம்: மலேசியாவை விட்டு வெளியேறினார் வட கொரிய தூதர்

  • 6 மார்ச் 2017

கோலாலம்பூரில் இருக்கும் தூதரகத்தை விட்டு வெளியேறியுள்ள மலேசியாவுக்கான வட கொரிய தூதர் விமான நிலையத்தை நோக்கி செல்வதாக நம்பப்படுகிறது.

படத்தின் காப்புரிமை MOHD RASFAN/AFP/Getty Images
Image caption கிம் ஜோங் நாமின் கொலைக் குற்றப் புலனாய்வை சூழ்ச்சியோடு கையாள முயன்றதாக வட கொரியா மீது மலேசிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டு

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த அவரது ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாமின் கொலையை புலனாய்வு செய்ததில் எழுந்த சர்ச்சையில், தூதர் காங் சோல் 48 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை மலேசிய அரசு உத்தரவிட்டது.

இந்தக் கொலைக் குற்றப் புலனாய்வை சூழ்ச்சியோடு கையாள முயன்றதாக வட கொரியா மீது மலேசிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட நஞ்சை இரண்டு பெண்கள் முகத்தில் தடவியதால், கிம் ஜோங் நாம் கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரேத பரிசோதனை முடிவுகளை வட கொரியா நிராகரித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்