கொழும்பு நகர குப்பைகளை மீதொட்டமுள்ள பிரதேசத்தில் குவிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  • 6 மார்ச் 2017

கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை மீதொட்டமுள்ள பிரதேசத்தில் கொண்டு சென்று குவிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காரணமாக கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை குவிப்பதன் காரணமாக மீதொட்டமுள்ள பிரதேசத்தில் பெரியதொரு குப்பை மலை உருவாகியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சூழல் மாசடைவு மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதுரலியே ரதன தேரர் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர், இந்த போராட்டத்திற்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

கொழும்பில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை இங்கு குவிப்பதை உடனடியாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்