ஃபியோங்கிற்கு பதிலாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை - ஜூப்பே

  • 6 மார்ச் 2017

குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் பிரான்சுவா ஃபியோங்கிற்கு பதிலாக போட்டியிட முன்னிலை வேட்பாளராக கருதப்படும் அலென் ஜூப்பே, அதிபர் தேர்தலில் போட்டியிட அழுத்தங்கள் இருந்தாலும், தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP/EPA
Image caption அதிபர் வேட்பாளர் ஃபியோங் மற்றும் அலென் ஜூப்பே

வரி செலுத்திய மக்களின் பணத்தை செய்யாத வேலைகளுக்காக தன்னுடைய குடும்ப உறுப்பினருக்கு வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை ஃபியோங் மறுத்துள்ளார்.

மத்திய வலது சாரி கட்சிக்குள்ளும், எப்ரல் 23 ஆம் நாள் நடைபெற இருக்கும் முதல் சுற்று தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்பிலும் ஃபியோங்கிற்கு ஆதரவு குறைந்துள்ளது.

ஃபியோங்கிற்கு பதிலாக போட்டியிடும் நபராக கருதப்படும் ஜூப்பே, தன்னுடைய போட்டியாளரின் பிடிவாத குணத்தை தாக்கி பேசியுள்ளதோடு, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்றில் ஜூப்பே முன்னேற்றம் அடையலாம் என கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஃபியோங் முதல் சுற்றிலேயே தேறமாட்டார் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption பல லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் ஃபியோங் ஆதரவு பேரணியில் கலந்து கொண்டனர்

அவருடைய நாடாளுமன்ற உதவியாளராக இருந்த ஃபியோங்கின் மனைவி பெனிலோப் பல ஆண்டுகளாக செய்யாத வேலைகளுக்காக ஊதியம் வழங்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை ஃபியோங் எதிர்கொண்டு வருகிறார்.

இருப்பினும், தன்னுடைய கணவருக்காக வேலைகளை செய்ததாக வலியுறுத்தியுள்ள பெனிலோப், அனைத்தும் சட்டப்பூர்வாக நடந்ததாகவும், பொதுவாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சனிக்கிழமை டு டிமென்ஷ் இதழ் என்ற பிரெஞ்சு பத்திரிகையிடம் கூறியிருக்கிறார்.

ஃபியோங்கின் இரு குழந்தைகளான மரியேவும் சார்லஸூம் வழக்கறிஞர்களாக தகுதி பெறுதவற்கு முன்னரே தந்தையின் அலுவலகத்தில் செய்த சட்டப்பணிகளுக்காக ஊதியம் வழங்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளும் கண்காணிக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்ற பேரணியில் பல லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றிய ஃபியோங் மீண்டும் போராடப் போவதாக கூறியிருக்கிறார்.

ஆனால், ஃபியோங்கின் பரப்புரை அணியின் முக்கிய உறுப்பினர்கள் .பியோங்கை கைவிட்டுள்ளதோடு, குடியரசு கட்சியின் பல உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்