மீண்டுமொரு பயணத்தடை ஆணையில் டிரம்ப் கையெழுத்து

பிரதானமான முஸ்லீம் நாடுகள் சிலவற்றிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் தடுக்கும் புதிய நிர்வாக ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக அதிபரின் அலுவலகம் கூறுகிறது.

இது குறித்து அவர் வெளியிட்ட முந்தைய ஆணை அமெரிக்க நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டது.

இந்தத் தடை ஆறு நாடுகளிலிருந்து புதிய விசா கோருவோரை பாதிக்கும்.

முந்தைய பட்டியலில் இடம்பெற்ற இராக், இப்போது புதிய பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது.

அதன் பிரஜைகள் மீது அதிகரிக்கப்பட்ட சோதனைகளுக்கு அமெரிக்கா உடன்பட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.

அமெரிக்காவை பயங்கரவாதத்திலிருந்து காக்க தேவைப்படுவதாக , வெள்ளை மாளிகை கூறிய, முந்தைய உத்தரவு குறித்து நாடெங்கும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்தப் புதிய உத்தரவு, இரான், சூடான், சிரியா, லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும். இது மார்ச் 16-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்