தொள்ளாயிரத்திற்கு அதிகமான நாணயங்களை சாப்பிட்ட ஆமை

அதிர்ஷ்டம் என்று நம்பி மக்கள் தூக்கி எறிந்த நாணயங்களை விழுங்கிய பச்சை கடல் ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர்கள், தொள்ளாயிரத்திற்கு அதிகமான நாணயங்களை வெளியே எடுத்தனர்.

படத்தின் காப்புரிமை BEN STANSALL/AFP/Getty Images

சில்லறை நாணயங்களை விழுங்குவதில் விருப்பம் கொண்டிருந்ததால் பாங்க் (வங்கி) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த பச்சை கடல் ஆமை, தற்போது பாங்காக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த நாணயங்களின் எடை மிகவும் அதிகமாக இருந்ததால் பாங்கின் உட்புற ஓட்டில் விரிசல் விழுந்து, நீச்சல் திறன் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆமைகளிடம் நாணயங்களை எறிந்தால் வாழ்நாள் அதிகரிக்கும் என்று தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் பாங்க், பரிசோதனை செய்யப்பட்டபோது, மிகவும் சீற்றத்துடன் இருந்ததாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட தலைமை மருத்துவர் கூறினார்.

ஆமையை காப்பாற்றுவதற்காக ஏழு மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது இதுவே முதல் தடவை என்பதும், இதற்கான செலவிற்க்காக பொதுமக்களிடமிருந்து ஓரளவு நன்கொடை பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்