6 முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் மூத்த அமைச்சர்கள் ஆதரவு

டிரம்ப்

அமெரிக்காவில் நுழைவதற்கு 6 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை, அமெரிக்கா நாட்டு பாதுகாப்பை பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கை என டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் அந்த ஆணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த புதிய ஆணை பயங்கரவாதிகளை நாட்டிற்குள் வரவிடாமல் தடுக்க வடிவமைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்துறைச் செயலர் ஜான் கெல்லி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ், ஆகியோருடன் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

வரும் வாரங்களில் படிப்படியாக நடைமுறைக்கு வரவிருக்கும் அந்த ஆணையில் இராக் சேர்க்கப்படவில்லை, மேலும் அதில் கிறித்துவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றிய ஒரு ஷரத்து கைவிடப்பட்டுள்ளது.

தற்போதைய விசா வைத்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்