மோசமான மண் வளத்தால் மரங்களில் வாயுக்களை கிரகிக்கும் தன்மை பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் பல மரங்கள் முன்னர் கருதப்பட்டதை போன்று கரிமங்களை (கார்பன்) சேமித்து வைக்க முடியவில்லை என்பதை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

கரியமில வாயுவின் வெளியேற்றத்தை மரங்கள் எந்தளவிற்கு சரிப்படுத்தும் என்பது குறித்து தங்கள் ஆய்வு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக மேற்கு சிட்னி பலகலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

சிட்னியின் எல்லைப்பகுதியில், 2050ஆம் ஆண்டு நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட கரியமில வாயுவின் அளவை போன்ற, அதிக அளவிலான கரியமில வாயுவை செயற்கையாக யூகலிப்டஸ் மரங்களின் மீது வீச செய்து, அதன் தாக்கத்தை கண்காணித்து வருகின்றனர் .

மண்ணின் மோசமான தரம் , மரங்கள் வாயுகளை கிரகிக்கும் தன்மையை பாதிக்கிறது என இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் அதே சமயம் காடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கார்பனின் அளவு குறித்த சர்வதேச கணிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்