மலேசியர்கள் வடகொரியாவை விட்டு வெளியேற தடை; கிம் ஜங்-நம் விவகார எதிரொலி

  • 7 மார்ச் 2017

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர், கிம் ஜங்-நம், கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, அதிகரித்துவரும் ராஜிய சர்ச்சையில், வடகொரியாவில் தற்போது இருக்கும் எந்த ஒரு மலேசியரும், நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கிம் ஜங் நம்

''மலேசியாவில் நடந்த சம்பவத்திற்கு முறையாக தீர்வு காணப்படும் வரை'' இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வடகொரிய அரச செய்தி நிறுவனமான, கே.சி.என்.ஏ கூறியிருக்கிறது.

வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் கடந்த மாதம் மலேசியாவில் நரம்பைப் பாதிக்கும் ரசாயனத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.

வட கொரியா இந்தக் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.

கிம் ஜோங் நாம் கொலை விசாரணையில் மலேசிய அதிகாரிகள் கூட்டுச்சதி : வட கொரியா சந்தேக நபர் குற்றச்சாட்டு

படுகொலை விவகாரம்: மலேசியாவை விட்டு வெளியேறினார் வட கொரிய தூதர்

கிம் ஜோங் நாம் கொலை: இந்தோனீஷிய, வியட்நாம் பெண்கள் மீது கொலை வழக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்