மக்கள் வெளியேற தடை: வடகொரியா - மலேசியா போட்டிக்குப் போட்டி

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங்-நாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவில் வசிக்கும் மலேசியர்களும், மலேசியாவில் இருக்கும் வடகொரியர்களும் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிம் ஜோங் நாம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் போலீஸாரிடம் உதவி கேட்ட போது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங்-நாம் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்து நடைபெற்று வரும் மலேஷியாவின் விசாரணை மீது வட கொரியர்கள் கோபமுற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்தே பழிவாங்கல் நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் நரம்புகளை தாக்கும் வலிமையான நச்சு ரசாயனத்தால் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் வட கொரியாவை மலேசியா நேரடியாக தாக்கவில்லை. ஆனால், இதற்கு பின்னணியில் வடகொரியா இருப்பதாக பரவலான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

மலேசியா மற்றும் வட கொரியாவை சேர்ந்த தூதுவர்களை இருநாடுகளும் பரஸ்பரம் வெளியேற்றியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்