இராக் மொசூல் நகரில் உச்சக்கட்ட போர்; ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்ட அரசு படைகள் தீவிரம்

  • 7 மார்ச் 2017

இராக்கில் உள்ள மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டிவிட்டு நகரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தொடர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய அரசாங்க அலுவலகங்களை கைப்பற்றியுள்ளதாக அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இராக் மொசூல் நகரில் உச்சக்கட்ட போர்

அரசுப்படையினர்களின் முன்னேற்றம் அங்குள்ள ஜன நெரிசல் மிக்க பழைய நகரத்தில் தாக்குதல் நிகழ்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது. அந்நகரத்தில்தான் இன்னும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நகரத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

இராக் ஐ.எஸ் அமைப்பினரின் இறுதி வலிமையான கோட்டையாக மொசூல் விளங்கி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் கிழக்கு மொசூல் அரசாங்க படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்ட அரசு படைகள் தீவிரம்

மொசூல் நகரின் மேற்குப்பகுதியை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசுப்படைகள் பிப்ரவரி 19 ஆம் தேதி ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, இரவு நடைபெற்ற மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் இது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவில் அரசுக்கட்டடங்களுக்குள் நுழைய திடீர் தாக்குதல் ஒன்றை இராக்கிய படைகள் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்