தென் கொரியாவில் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு : சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  • 7 மார்ச் 2017

தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஏவுகணை தடுப்பு பாதுகாப்புக் கவசத்தை நிர்மாணிக்கத் தொடங்கியதை அடுத்து தன்னுடைய சொந்த பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக சில வெளியில் தெரியாமல் நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஏவுகணை அமைப்புமுறை

வட கொரியாவிலிருந்து வரும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை பாதுகாப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.

கடந்த திங்களன்று, ஜப்பான் கடற்கரைக்கு அப்பால் உள்ள பகுதியில் தொடர் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை நடத்தியிருந்தது. இதற்கு சீனா தனது கண்டனங்களை தெரிவித்திருந்தது.

ஆனால், தென் கொரியாவில் அமையவுள்ள அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு முறையை எண்ணியே சீனா பெரிதும் கவலை அடைந்துள்ளது.

இந்த அமைப்பில் உள்ள ரேடார் சீனாவிற்குள் மிக ஆழமாக ஊடுருவி பார்க்கக்கூடிய திறன் கொண்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்