மலேசியா : செளதி மன்னரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு

செளதி மன்னர் சமீபத்தில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த போது அவரை படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

செளதி அதிபருடன் இந்தோனீஷிய அதிபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

செளதி அதிபருடன் இந்தோனீஷிய அதிபர்

செளதி மன்னர் மலேசியாவிற்கு வருவதற்கு ஒரு மாதம் முன்பு தன்னுடைய படையினர் ஏமனிலிருந்து வந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் உள்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மலேசிய காவல்துறை தலைவர் ஹாலித் அபு பக்கர் தெரிவித்தார்.

சுமார் இரு ஆண்டுகளாக தற்போது வரை ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து செளதி தலைமையிலான கூட்டணிப்படைகள் எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்