காபூல் ராணுவ மருத்துவமனைக்குள் துப்பாக்கிச் சண்டை

  • 8 மார்ச் 2017

ப்கன் தலைநகர் காபூலில் உள்ள மிகப்பெரிய ராணுவ மருத்துவமனைக்குள் தாக்குதல்தாரிகள் நுழைந்துள்ளதாகவும், துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

சர்தார் தவூத் கான் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த மருத்துவமனையில் சுமார் 400 படுக்கையறைகள் இருக்கின்றன. மேலும், அமெரிக்க தூதரகத்திற்கு அருகே இது அமைந்துள்ளது.

மருத்துவரின் சீருடையை அணிந்திருந்த ஆயுததாரி ஒருவர் தன்னுடைய ஆடையில் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மருத்துவ பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, இந்த தாக்குதல் அனைத்து மனித மாண்புகளையும் கொன்றுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்று அல்லது ஐந்து தாக்குதல்தாரிகள் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும், அவர்கள் மூன்று மற்றும் நான்காவது தளங்களில் நிலை கொண்டிருப்பதாகவும் பெயர் வெளியிடாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்