திருமணமாகாமல் கர்ப்பம்: அபுதாபியில் கைதான காதல் ஜோடி; விடுவிக்குமாறு மன்றாடும் தாய்

  • 8 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை CULVERWELL FAMILY
Image caption எம்லின் கல்வெர்வெல் தனது காதலி இரினா நோஹாயை ஐக்கிய அரபு எமிரேட்டில் சந்தித்தார்.

திருமணமாகாமலே உடலுறவில் ஈடுபட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்டில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடியை விடுதலை செய்யுமாறு தென்னாப்பிரிக்க நபரின் பெற்றோர் மன்றாடுகிறார்கள்.

தென்னாப்பிரிக்க நபர் ஒருவர், தனது உக்ரைன் காதலியுடன் ஐக்கிய அரபு எமிரேட்டில் கைது செய்யப்பட்டார்.

எம்லின் கல்வெர்வெல் (29) என்ற அந்த நபரின் காதலி இரினா நோஹாய் (27). கடந்த ஜனவரி மாதம், அபுதாபியில் வயிற்று வலி காரணமாக,ஒரு மருத்துவரிடம் சென்றார். அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் உறுதி செய்தார். எம்லின் கல்வெர்வெல் ஐந்து ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Alamy
Image caption அபுதாபி (கோப்புப்படம்)

அந்த நாட்டுச் சட்டப்படி, கர்ப்பமான பெண், தனது திருமண சான்றிதழை காட்ட வேண்டும். ஆனால் திருமணம் ஆகாததால், அவர்களால் திருமண சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், மருத்துவமனையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை KARIM SAHIB

தற்போது, எம்லின் கல்வெர்வெலின் தாய் லிண்டா, அபுதாபியில் அதிகாரிகளிடம் தனது மகனையும், அவரது காதலியையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

"காதலித்ததுதான் அந்த ஜோடி செய்த பெரிய தவறு" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஐக்கிய அரபு எமிரேட் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்பதால் தங்களால் உதவ முடியவில்லை என தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக நியுஸ் 24 செய்தி வெளியிட்டுள்ளது.

சட்ட உதவி கோருமாறு அந்த ஜோடிக்கு தென்னாப்பிரிக்க அரசு ஆலோசனை கூறியுள்ளதாக ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள பிபிசி செய்தியாளர் பும்ஸா ஃபிஹ்லானி தெரிவிக்கிறார்.

இன்னும் பரிோசதனைகள் நடந்து வருவதால் அதிகாரிகள் இன்னும் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என நோஹாய் தெரிவித்தார்.

அந்த காதல் ஜோடி, சட்டத்தை மீறியிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டால், பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்