குவாட்டமாலா அரசு குழந்தைகள் இல்லத்தில் 20 சிறுமிகள் இறப்பு பற்றி புலனாய்வு

தலைநகர் குவாட்டமாலா நகரத்திற்கு அருகிலுள்ள அரசு நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் பதின்ம வயதுடைய குறைந்தது 20 சிறுமிகள் இறந்து போனதற்கான காரணங்களை உடனடியாக புலனாய்வு மேற்கொள்ள வேண்டுமென குவாட்டமாலா நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குவாட்டமாலா அதிபர் ஜிம்மி மோராலஸ் 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு

அந்த இல்லம் தீப்பற்றி எரிந்தபோது பல குழந்தைகள் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட ஒரு கலவரத்தின்போது தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்கள் குழு ஒன்று பஞ்சு மெத்தைகளில் தீப்பற்ற வைத்திருக்கலாம் என்று தோன்றுவதாக காவல்துறை தலைவர் நேரி ரமோஸ் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 20 சிறுமிகள் இறந்து போனதற்கான காரணங்களை உடனடியாக புலனாய்வு மேற்கொள்ள நாடாளுமன்றம் கோரிக்கை

குவாட்டமாலா அதிபர் ஜிம்மி மோராலஸ் 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்திருக்கிறார்.

இந்த குழந்தைகளின் இல்லத்தில் காணப்படும் நிலைமைகள் பற்றி அரசு அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அரசு குழந்தைகள் இல்ல நிலைமைகள் பற்றி அரசு அதிகாரிகள் கடும் விமர்சனம்

400 குழந்தைகளை தங்க வைக்கும் வசதியுடைய இந்த இல்லத்தில் கடந்த ஆண்டு 700 குழந்தைகள் தங்கியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்:

மோசடி குற்றங்களை ஏற்றார் பிரயன் ஜிமினஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்