சி.ஐ.ஏவின் உளவுக் கருவிகள்: எஃப்.பி.ஐ, சி.ஐ.ஏ. இணைந்து புலனாய்வு

  • 9 மார்ச் 2017

அமெரிக்க அரசின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பயன்படுத்தியதாக சொல்லப்படும் பல வகையான கணினி அமைப்புகளை ஊடுருவும் சாதனங்களின் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது தொடர்பாக குற்றவியல் புலனாய்வு ஒன்றை அமெரிக்க மத்திய உளவு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கசிந்துள்ள விக்கிலீக்ஸ் ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றி கருத்துக்கள் தெரிவிக்க எப்.பி.ஐ, சிஐஏ மற்றும் வெள்ளை மாளிகை மறுப்பு

விக்கிலீக்ஸ் ஆயிரக்கணக்கான கோப்புகளை வெளியிட்டுள்ள பிறகு அமெரிக்காவின் எஃப்.பிஐ மற்றும் சி.ஐ.ஏ. ஆகிய உளவு அமைப்புக்கள் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சி ஒலிவாங்கிகளில் ஒட்டுக்கேட்கும் வழிமுறைகளை அமெரிக்க மத்திய உளவுத்துறை வடிவமைத்ததாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

செவ்வாய்க்கிழமை கசிந்துள்ள இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றி கருத்துக்கள் தெரிவிக்க எப்.பி.ஐ, சிஐஏ மற்றும் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டன.

புதன்கிழமை பிபிசியிடம் கருத்து தெரிவித்த சிஐஏ செய்தி தொடர்பாளர், "தீவிரவாதிகள் மற்றும் பிற எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கின்ற உளவுத்துறை சமூகத்தின் திறனை சேதப்படுத்துகின்ற வகையில் வெளியாகும் விக்கிலீக்ஸ் ஆவண கசிவுகளால் அமெரிக்க மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறார்.

"இத்தகைய ஆவண கசிவுகள் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் செயல்பாடுகளை ஆபத்திற்கு உள்ளாக்குவதோடு, எம்மீது தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு கருவிகளையும், தகவல்களையும் அளித்து எமது எதிரிகளை மேம்படுத்துகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு:

சிஐஏவின் உளவுக் கருவிகள்: அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்