பாகிஸ்தான் இராணுவ வசமானது வசிரிஸ்தான்; வன்முறை ஓயுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான் இராணுவ வசமானது வசிரிஸ்தான்; வன்முறை ஓயுமா?

ஆப்கன் பாகிஸ்தான் எல்லையிலுள்ள பழங்குடிப் பிரதேசங்கள் பல ஆண்டுகளாக தீவிரவாதத்தோடு தொடர்புள்ளவைகளாக பார்க்கப்பட்டன.

சமீப காலங்களில் அல்கயீதா, தாலிபன் உள்ளிட்ட உலகின் பல்வேறு ஜிகாதிகளின் தலைமையிடமாகவும் இது மாறியிருந்தது.

ஆனால் நீண்ட இரத்தம் தோய்ந்த சண்டைக்குப்பின், இந்த பிரதேசம் பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

இதை மீண்டும் கைப்பற்றுவதற்கு 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் தமது தாக்குதலை துவக்கியது.

தற்போது ஏறக்குறைய முழு பிராந்தியமும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது

அலெப்போவிலும் மொசூலிலும் நடந்ததைப்போலவே இங்கும் ஜிகாதிகளுக்கு எதிரான இராணுத்தாக்குதல் இங்கும் பெரும் அழிவை நிகழ்த்தியிருக்கிறது.

சண்டை உக்கிரமானபோது இங்கிருந்த மக்களெல்லாம் வெளியேறிவிட்டனர்.

அவர்களை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இங்கே மக்கள் வாழலாம் தம் குழந்தைகளை படிக்கவைக்கலாம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் புதிய பள்ளிக்கூடம் உள்பட பலவற்றை இராணுவம் உருவாக்கியுள்ளது.

உள்ளூர் சந்தைகளும் உருவாகி வருகின்றன.

அதேசமயம் எதிர்காலம் நிச்சயமற்றத்தன்மை நிரம்பியது என்பதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர்.

அங்குள்ள நிலைமை குறித்து பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு.