டிரம்பின் பயணத்தடைக்கு எதிராக மேலும் மூன்று அமெரிக்க மாநிலங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட புதிய பயணத்தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில், ஹவாயுடன் அமெரிக்காவின் மேலும் மூன்று மாநிலங்களும் இணைந்துள்ளன.

படத்தின் காப்புரிமை AP
Image caption டிரம்பின் புதிய நிர்வாக ஆணைக்கு தடை பெறுவதற்கு மசாச்சூசெட்ஸூம், ஓரேகானும் வழக்குகள் தொடுக்க போவதாக தெரிவிப்பு

பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் 6 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு 90 நாட்கள் தடைவிதிக்கும் புதியதொரு நிர்வாக ஆணையொன்றில் அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை கையெழுத்திட்டார்.

அமெரிக்காவுக்கு கேடானதாக இது அமையும் என்று வாஷிங்டன் கூறியுள்ள நிலையில், இது முஸ்லிம்கள் மீதான தடை என்ற குற்றச்சாட்டை நியூ யார்க் இப்போதும் வைத்துள்ளது. மசாச்சூசெட்ஸ் பின்னர் இவற்றோடு இணைந்துள்ளது.

காணொளி: ட்ரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ட்ரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?

மார்ச் 16 முதல் அமலாக்கப்பட இருக்கும் இந்த நிர்வாக ஆணையை தடுக்கும் விதமாக மசாச்சூசெட்ஸூம், ஓரேகானும் வழக்குகளை தொடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தடை நீதிமன்றத்தில் வெற்றிபெறும் என்பதில் "மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காணொளி: டிரம்பின் பயணத் தடை: உலகளவில் எதிர்ப்புகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டிரம்பின் பயணத் தடை: உலகளவில் எதிர்ப்புகள்

மேலதிக தகவல்களுக்கு:

மீண்டுமொரு பயணத்தடை ஆணையில் டிரம்ப் கையெழுத்து

6 முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் மூத்த அமைச்சர்கள் ஆதரவு

டிரம்பின் புதிய பயணத்தடைக்கும் எழுந்தது சட்ட சிக்கல்

'பயணத்தடை அமெரிக்க நலன்களை பாதித்து குழப்பங்களை உருவாக்கும்'

பயணத்தடை மீண்டும் அமல்படுத்தப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்

'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்