மொசூல்: பெருமளவு மக்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிப்பு

இராக்கில், மொசூல் நகருக்குஅருகில், இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் அமைப்பு, நூற்றுக்கணக்கான மக்களை கொன்று, கூட்டாக புதைத்திருக்கும் புதைகுழியை கண்டறிந்துள்ளதாக அரசு ஆதரவு படைகள் தெரிவித்தன.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption சடலங்களின் எண்ணிக்கை குறித்து ஹஷெத் அல்-ஷாபி அமைப்பிடம் இருந்து தகவல்கள் இல்லை

ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து சில நாட்களுக்கு முன்னதாக கைப்பற்றிய பாதுஷ் சிறையில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலங்களின் எண்ணிக்கை குறித்து ஷியா கிளர்ச்சி குழுவினர் அதிகம் உள்ள ஹஷெத் அல்-ஷாபி அமைப்பு தகவல்கள் தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption பாதுஷ் சிறையில் பெருமளவு மக்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிப்பு

ஆனால், கிட்டத்தட்ட அறுநூறு கைதிகளை இந்த சிறைக்கு அருகில் ஐ.எஸ் அமைப்பு கொன்று புதைத்திருப்பதாக மனித உரிமைகள் புலனாய்வு அமைப்பு 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட விசாரணை முடிவுகள் தெரிவித்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்