போலி செய்திகள், தகவல் திருட்டு - கவலை தெரிவிக்கும் வேர்ல்ட் வைட் வெப் கண்டுபிடிப்பாளர் #BeyondFakeNews

இணையத்தில் உலவும் போலி செய்திகள், தகவல் திருட்டு மற்றும் அரசாங்க இணைய விளம்பரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியன குறித்து தன்னுடைய கவலைகளை வெளியிட்டுள்ளார் வேர்ல்ட் வைட் வெப்பை கண்டுபிடித்தவரான சர் டிம் பெமர்ஸ்-லீ.

படத்தின் காப்புரிமை Peter Macdiarmid
Image caption வேர்ல்ட் வைட் வெப் கண்டுபிடிப்பாளர் சர் டிம் பெமர்ஸ்-லீ

இணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு நிகழ்வில், இணையத்தில் குடிமக்களின் சுயவிவர குறித்த தகவல்களின் கட்டுப்பாட்டு இழப்பு குறித்தும் மற்றும் தனது குடிமக்களின் செயல்பாடுகளை இணையத்தில் கண்காணிக்கும் அரசாங்கங்களின் நடவடிக்கை குறித்தும் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார் சர் டிம்.

இணையத்தளங்களின் வடிவமைப்பு முறை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தவறான தகவல்களையும், போலியான செய்திகளையும் பரப்புவதாக கூறியுள்ளார்.

கண்காணிப்பு சட்டத்தில் அரசாங்கத்தின் அளவு கடந்த நடவடிக்கைக்கு எதிராகவும், தவறான தகவல் பரவலை எதிர்த்தும் போராட டிம் பெமர்ஸ் லீ, அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்