டிரம்ப் நிர்வாகத்தால் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்

  • 12 மார்ச் 2017

அமெரிக்காவின் நியு யார்க் மத்திய வழக்கறிஞர் ஒருவர், டிரம்ப் நிர்வாகம் கேட்டுக் கொண்ட போது அவர் உள்பட 45 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய மறுத்திருந்த நிலையில், தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அதிபர் தேர்தலுக்குப்பிறகு பஹாரா தொடர்ந்து பதவியில் நீடிக்க முதலில் டிரம்ப்பால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

''நான் ராஜினாமா செய்யவில்லை. சிலமணி நேரங்களுக்குமுன்தான் நீக்கம் செய்யப்பட்டேன்'' என்று ப்ரீத் பஹாரா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்குப்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பஹாராவும் சந்தித்து கொண்டதையடுத்து, பஹாரா தொடர்ந்து பதவியில் நீடிக்க முதலில் டிரம்ப்பால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பட்டியலில் பஹாராவின் பெயர் சேர்க்கப்பட்டது.

அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் தங்கள் பதவியைவிட்டு விலகுமாறு நீதித்துறை கேட்டுக்கொண்டது.

''என்னுடைய பணி வாழ்விலே தென் மாநில நியு யார்க் மாநிலத்தின் அரசு வழக்கறிஞராக இருந்ததுதான் மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்'' என்று ட்விட்டரில் பஹாரா கூறியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்