ஜப்பானில் சௌதி மன்னர்: நட்சத்திர விடுதியில் ஆயிரக்கணக்கான அறைகள் பதிவு

சுமார் 50 ஆண்டுகளில் சௌதி மன்னரால் மேற்கொள்ளப்படும் முதலாவது ஜப்பான் பயணமாக அரசர் சல்மான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மன்னருடன் வந்துள்ள அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரைத் தங்க வைப்பதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் ஆயிரக்கணக்கான அறைகளுக்கு மேலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

சௌதி அரேபியாவுடனான உறவை விரிவாக்கிக் கொள்வதற்கு இந்தப் பயணம் பயன்படும் என்றும், பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அதிக அளவில் நம்பியிருப்பதை விரிவாக்க எண்ணுகின்ற சௌதி அரேபியாவின் முயற்சிகளுக்கும் இது உதவும் என்றும் ஜப்பான் நம்புகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மன்னர் சல்மான் தற்போது ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே மலேசியா, இந்தோனீஷியாவில் பயணம் மேற்கொண்ட அவர் அடுத்து சீனாவுக்கும் செல்ல இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்