தென் கொரிய அரசு இல்லத்தில் இருந்து வெளியேறினார் பதவி நீக்கப்பட்ட பார்க்

தென்கொரிய அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை வெள்ளிக்கிழமையன்று அரசியல் சாசன நீதிமன்றம்உறுத்திப்படுத்திய பின்னர் பிறகு, பாக் குன்-ஹே வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், அவரதுஎதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption “என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை, இறுதியில் வெளிப்படும்” - பார்க் குன் ஹெ

அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தலைநகர் சோலில் உள்ள தனது தனிப்பட்ட இல்லத்திற்கு திரும்பிய அவர், நூற்றுக்கணக்கான ஆதரவளர்களின் வரவேற்புகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை, இறுதியில் வெளிப்படும் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சம்சியோங் மாவட்டத்திலுள்ள பாாக் குன் ஹெயின் சொந்த வீடு

சட்டரீதியான பாதுகாப்புக் கவசத்தை இழந்துவிட்ட அவர், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, மே மாத முற்பகுதியில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்