சிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: ஐ.நா.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 6 ஆண்டுகால போருக்கு பின்னர், சுமார் 6 மில்லியனுக்கு மேலான குழந்தைகள் மனிதநேய உதவிகளை நம்பியுள்ளனர்

சிரியா போரில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு, 2016 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் மிக மோசமானதாக அமைந்துள்ளது என ஐ.நா சபையால் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா போரில் 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் மூன்று பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியிலும் அல்லது அதற்கு அருகாமையிலும் இருந்ததாகவும் ஐ.நாவின் குழந்தைகளுக்கான முகமை யுனிசெஃப் தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் பிற நூற்றுக்கணக்கான குழந்தைகள் நோயில் இறந்ததாகவும் ஆனால் போதிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் அவற்றைத் தடுத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

சமீப காலங்களில், அதிகமான உயிர்களை பலிவாங்கிய உள்நாட்டு போரான சிரியா போரின் ஆறாவது ஆண்டு தினத்தின் சில தினங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்