“இராக்கில் ஐஎஸ் அமைப்பை அழிக்கும் நோக்கில் அமெரிக்கா உறுதி”

படத்தின் காப்புரிமை AFP

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையை ஒருங்கிணைக்கும் அமெரிக்க தூதர், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இராக் நகரான மொசூலில் இருந்தால் அவர்கள் அங்கேயே கொல்லப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மொசூலில் உள்ள தீவிரவாதிகளை தோற்கடிப்பது மட்டுமல்ல, அவர்களை தப்ப விடக் கூடாது என்பதில் அமெரிக்க உறுதியாக இருப்பதாக பிரட் மெக்கூர்க் தெரிவித்தார்.

ஐஎஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த மேற்கு மொசூலுக்கான கடைசி சாலையையும் இராக் சிப்பாய்கள் துண்டித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்தில், மொசூலின் கிழக்கு பகுதியின் பாதியை திரும்ப கைப்பற்றும் நடவடிக்கையை இராக் சிப்பாய்கள் முடித்துவிட்டதாகவும் மேலும் தற்போது மேற்கு பகுதியின் பாதியில், மூன்றுக்கும் மேற்பட்ட அண்டை பகுதியை கைப்பற்றி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்