துருக்கிக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தொடங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

படத்தின் காப்புரிமை EPA
Image caption நெதர்லாந்தில் துருக்கி அமைச்சர்கள் பேரணியில் பங்கு கொள்வது தடுக்கப்பட்டதையடுத்து அதிபர் எர்துவானின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

வெளிநாடுகளில் அரசியல் பேரணிகளை நடத்தும் துருக்கி அரசின் முயற்சிகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் துருக்கிக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை கடுமையாக்கியுள்ளன.

ஜெர்மனியில் குடியேறிகளுக்கு மத்தியில் துருக்கிய அமைச்சர்கள் பிரசாரம் செய்வதை எதிர்ப்பதாக, ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் டோமாஸ் டி மெஸ்யா தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் துருக்கிய அமைச்சர்கள் பேரணிகளில் கலந்து கொள்வது தடுக்கப்பட்டதையடுத்து, நெதர்லாந்து நாட்டு மக்களை நாஜிகளுடன் ஒப்பிட்டு பேசியதற்காக துருக்கி அதிபர் எர்துவான் மன்னிப்பு கோர வேண்டும் என்று நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ரூட் கோரியுள்ளார்.

அதிபரின் அதிகாரங்களை விரிவாக்கும் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள துருக்கியர்கள் ஆம் என வாக்களிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து இந்த பேரணிகள் நடத்தப்படுகின்றன.

துருக்கி பிரதமரின் விஜயத்தை டென்மார்க் தள்ளிப் போட்டுள்ளது; மேலும் துருக்கிக்கான உதவிகள் குறித்து ஆலோசிப்பது தற்போது கடினம் என ஜெர்மனி எச்சரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்