மலேசியாவில் ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு வைத்திருந்ததாக 7 பேர் கைது

படத்தின் காப்புரிமை AFP

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகித்து, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளதாக மலேசிய போலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான கைது, கிழக்கு மாநிலமான சபாவாவின் போனியோ தீவில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்டதாக போலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் பணி புரியும் குடியேற்ற அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புடன் தொடர்புடைய மலேசியா மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சபாவின் வழியாக பிலிப்பைன்ஸிற்குள் நுழையவும், வெளியே செல்லவும் உதவி செய்ததாக அவர் மீது சந்தேகங்கள் எழுந்தன.

கடந்த வருடங்களில், பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வாழும் நாடான மலேசியாவில் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகித்து 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்