கிரஃப்ட்ஸ் நாய்கள் கண்காட்சியில் சிறந்த போட்டியாளராக அமெரிக்க காக்கர் ஸ்பானியல் தேர்வு

இங்கிலாந்தில் நடைபெற்ற கிரஃப்ட்ஸ் நாய்கள் கண்காட்சியில் அமெரிக்க காக்கர் ஸ்பானியல் ரக நாய் கண்காட்சியில் சிறந்த போட்டியாளர் பரிசை தட்டிச் சென்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்க காக்கர் ஸ்பானியல்

பிளாக்பூல் பகுதியிலிருந்து வரும் இந்த இரண்டு வயது குட்டி கடந்த சனிக்கிழமையன்று வேட்டையாடும் நாய் இனங்களுக்கு வைக்கப்பட்ட போட்டியில் பரிசை வென்றது. ஸ்பானியல் குட்டியை அதன் உரிமையாளர் ஜேசன் லின் கையாண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்பானியல் குட்டியுடன் அதன் உரிமையாளர் ஜேசன் லின்

அதன் தனித்துவமான நீண்ட மற்றும் மூவர்ணங்களை கொண்ட ரோமங்கள் மற்றும் அதன் நீண்ட வால் என்று தன் நாய்க்குட்டியை பற்றி புகழ்ந்து பேசினார் லின்.

இந்த கண்காட்சியில் இரண்டாம் இடத்தை ஃபிராங்கி என்ற பெயர் கொண்ட சிறிய ரக நாய் இனமான மினியேச்சர் பூடுல் பெற்றது.

இங்கிலாந்தில் நாய்களுக்காக நடந்த பிரம்மாண்ட கண்காட்சி (புகைப்படத் தொகுப்பு)

இந்தாண்டு பர்மிங்ஹாமில் உள்ள என் இ சி அரங்கத்தில் நடைபெற்ற நான்குநாள் கண்காட்சியில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நாய்கள் பங்கேற்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையிலான லேபரடார் வகை நாய்கள் கலந்து கொண்டன.

இந்த கண்காட்சியை காண சுமார் 1.6 லட்ச நாய் உரிமையாளர்கள் மற்றும் பிரியர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்