ஆயிரம் நாணயங்களை விழுங்கிய "பாங்க்" ஆமைக்கு நீச்சல் பயிற்சி

சுமார் ஆயிரம் நாணயங்களை விழுங்கியதால் "பாங்க்" (வங்கி) என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டிருக்கும் தாய்லாந்தின் கடல் ஆமை, சிகிச்சைக்குப் பின் மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வருகிறது. கூடவே, நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் இந்த ஆமையின் தடாகத்தில், அதிர்ஷ்டம் என்று நம்பி மக்கள் தூக்கி எறிந்த நாணயங்களை விழுங்கிய அந்த ஆமையை, கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நாணயங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டியதாயிற்று.

"பாங்க்" என்கிற இந்த ஆமை அந்த நாணயங்களை விரும்பி விழுங்கிவிட்டதால், அதன் மேலிருக்கும் கடின ஓட்டில் கீறல் விழுந்து விட்டது. அதனால் அது நீச்சல் அடிப்பது கடினமானதாக மாறியது.

7 மணிநேரம் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, இந்த பச்சை கடல் ஆமையின் நீந்துவதற்கு பயன்படும் உறுப்புகள் திறன் முழுவதையும் ஏற்கெனவே பெற்றுவிட்டதாக இந்த ஆய்வக மையத்திலுள்ள கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்