நெதர்லாந்து தூதரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது என துருக்கி முடிவு

நெதர்லாந்தில் இரண்டு துருக்கிய அமைச்சர்கள் பேரணிகளில் பங்கு கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, அந்நாட்டின் தூதரை திருப்பி அனுப்ப முடியாது என துருக்கி அமைச்சரவை உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கியில் உள்ள நெதர்லாந்தின் ராஜரீக கட்டடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நெதர்லாந்துடனான உயர்மட்ட அரசியல் ஆலோசனைகளை துருக்கி இடைநீக்கம் செய்வதாக துருக்கியின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

துருக்கி அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், புலம் பெயர்ந்த துருக்கியர்களின் ஆதரவை பெற நடத்தவிருந்த பேரணிகள் குறித்து வார இறுதியில் சர்ச்சை கிளம்பிய தருணத்தில் தூதர் நாட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.

புதன்கிழமையன்று நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு முன்னதாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்ட, தான் இந்த விஷயத்தை கையாண்ட விதத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

இஸ்லாமிற்கு எதிரான சுதந்திர கட்சியை சேர்ந்த அவரின் போட்டியாளர் கீர்ட் வில்டர்ஸ் நாட்டின் எல்லைகளை மூட வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்