ஒபாமாவின் சுகாதார சேவை திட்டத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசு

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் ஒபாமாவின் சுகாதார சேவை பராமரிப்பு திட்டத்தை கலைக்கும் சட்டத்தை, குடியரசுக் கட்சி அமலுக்கு கொண்டு வந்தால் 14 மில்லியன் மக்கள் தங்கள் சுகாதார காப்பீடை இழக்கக்கூடும் என அமெரிக்காவில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு தசாப்த காலத்தில், புதிய திட்டத்தின் கீழ் காப்பீட்டை இழப்பவர்களின் எண்ணிக்கை 24 மில்லியனாக உயரக்கூடும் என நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது

ஆனால் அமெரிக்க சுகாதாரச் செயலர் டாம் பிரைஸ், அந்த அறிக்கையை மறுத்துள்ளார்.

புதிய திட்டத்தின்படி, குறைந்த செலவில் மற்றும் அதிக தேர்வுகளை கொடுக்கும் காப்பீட்டை அதிக எண்ணிக்கையிலான மக்கள் பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்திற்கு அதிபர் டிரம்ப் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்