அமெரிக்காவில் கடும் பனிப்புயல், அவசரநிலை அறிவிப்பு

பெரிய அளவில் குளிர்காலப் புயல் மற்றும் அச்சுறுத்தும் விதமான பனிப்புயல் காரணமாக, அமெரிக்காவின் வட- கிழக்கு பகுதியில் உள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்சி ஆகிய மாநிலங்களில் அவரசகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் விதமான பனிப்புயல் காரணமாக, அமெரிக்காவின் வட- கிழக்கு மாகாணங்களான நியூயார்க் மற்றும் நியூஜெர்சி போன்ற இடங்களில் அவரசகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், AFP

பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் பனிப்புயல் வீசுவதற்கான அபாயம் உள்ளதாக தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று பின்னேரத்தில், சில இடங்களில் 60 சென்டிமீட்டர் அளவு வரை பனி பதிவாகும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலை காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்கவிருந்த ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் தனது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.

அவர்கள் வெள்ளியன்று சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்