இலங்கை கப்பல் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தல்?

சோமாலிய கடற்பரப்பில் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் காப்புரிமை European Union Naval Force
Image caption 2008 ஆம் ஆண்டு முதல் சோமாலியாவில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின் “அட்லாண்டா பயிற்சி நடவடிக்கை”

சோமாலியாவின் வடக்கு கடற்பரப்பில் திங்கள்கிழமை இலங்கைக் கொடியோடு சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில், கடற்கொள்ளையரென சந்தேகப்படுவோர் பலர் புகுந்துள்ளதாக உள்ளூர் வாசிகளும், அதிகாரிகளும் கூறுகின்றனர்.

கடற்கொள்ளையர் இதில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்ய இன்னும் காலம் கனியவில்லை என்று அந்த பகுதியில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இது கடற்கொள்ளையர் தான் என்று உறுதிப்படுத்தப்பட்டால், 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர், சோமாலிய கடற்கொள்ளையரால் கடத்தப்படுகின்ற முதல் வணிக கப்பல் இதுவாக இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய கடற்படை பிபிசியிடம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "திங்கள்கிழமை மாலை இது பற்றி கேள்விப்பட்டோம். முதலாவதாக, ஒரு கடல்பகுதி ரோந்து ராணுவ விமானத்தை புலனாய்வு செய்ய அனுப்பியுள்ளோம்" என்று கூறியிருக்கிறது.

"நேற்று பிற்பகல் இந்த கப்பலை இரண்டு சிறிய படகுகள் பின்தொடர்ந்தன. பின்னர் அது மறைந்து விட்டது என்று 'ஓசன்ஸ் பியாண்ட் பைரசி" என்ற மீட்புதவி குழுவை சேர்ந்த ஜான் ஸ்டீடு என்பவர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்