"பணியிடத்தில் தலையில் முக்காடு அணிவதை நிறுவனம் தடை செய்வது சட்டப்பூர்வமானது"

தலையில் முக்காடு உள்பட அரசியல், தத்துவார்த்த அல்லது மத அடையாளங்கள் தெரியும் அளவுக்கு ஆடை அணிவதை பணி வழங்குவோர் தடைசெய்ய உரிமை இருக்கிறது என்று ஐரோப்பாவின் உயரிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

ஆனால், பணியாளர்கள் அனைவரையும் நடுநிலையாக ஆடை அணிய செய்ய, நிறுவனத்தின் உள்ளக விதிகளின் அடிப்படையில் இந்த தடை அமைந்திருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒரு வாடிக்கையாளரின் விருப்பத்தின் அடிப்படையில் இது அமையக்கூடாது என்று அது தெரிவித்துள்ளது.

பணிபுரியும் இஸ்லாமிய பெண்கள் தலையில் அணிந்து வரும் முக்காடு பிரச்சனை தொடர்பாக நீதிமன்றம் எடுத்துள்ள முதலாவது முடிவாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

பெல்ஜியத்திலுள்ள ஜி4எஸ் நிறுவனத்தில் தலையில் முக்காடு அணிந்து வந்த வரவேற்பாளர், அதனை அகற்றிவிட கூறப்பட்டதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இந்த வழக்கு பற்றிய தெளிவுகளை வழங்க ஐரோப்பாவின் உயரிய நீதிமன்றத்தை பெல்ஜியத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கோரியிருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்