சோமாலியா: மழை பெய்ய பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர்

சோமாலியா கடுமையான வறட்சி பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், மழை பெய்ய கடவுளை வேண்டி நடத்தப்பட்டுள்ள தேசிய பிரார்த்தனையில் அந்நாட்டின் பிரதமர் அலி ஹசான் கெய்ரா பங்கேற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Somali PM office
Image caption சோமாலிய வறட்சியை தேசிய பேரழிவாக அறிவித்து அதிபர் முகமது அப்துல்லாஹி ஃபர்மாஜோ சர்வதேச உதவியை கோரினார்

தலைநகர் மோகடிஷூவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும்போது, சோமாலிய மக்களிடம் இருந்து வறட்சி சுமையை நீக்கிவிட வேண்டும் என்று கடவுளிடம் கேட்டு கொண்டார்.

சோமாலியா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Somali PM office
Image caption சோமாலியா பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை

இந்த வறட்சியை தேசிய பேரழிவாக அறிவித்திருக்கும் அதிபர் முகமது அப்துல்லாஹி ஃபர்மாஜோ, சர்வதேச உதவியை கோரியுள்ளார்.

சோமாலியாவும், மேற்கு ஆப்ரிக்க சாஹேல் பகுதி வரை பஞ்சத்தால் அல்லலுற்ற 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்ரிக்காவில் முதல்முறையாக தென் சூடானில் தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்