தாய்லாந்தில் பிடிப்பட்ட 5 மில்லியன் டாலர் மதிப்புமிக்க காண்டாமிருக கொம்புகள்

நாட்டின் பிரதான விமான நிலையத்தில் இதுவரையில்லாத அளவுக்கு சட்டப்பூர்வமற்ற முறையில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரியதொரு அளவிலான காண்டாமிருக கொம்புகளை கைப்பற்றியுள்ளதாக தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடந்த ஆண்டு மட்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன

எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒரு சூட்கேஸில் சுமார் 5 மில்லியன் டாலர் மதிப்புமிக்க 21 காண்டாமிருக கொம்புகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சூட்கேஸை எடுத்த இரண்டு தாய்லாந்து பெண்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் காண்டாமிருகங்கள் பெருமளவில் கொல்லப்படுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஆப்ரிக்காவில் காண்டாமிருக வேட்டை அதிகரித்து வருகிறது.

ஆசியாவில் காண்டாமிருக கொம்புகளின் தேவை அதிகரித்திருப்பதால் இந்த வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்