ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பஞ்சத்தில் 2 கோடிப்பேர் பாதிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பஞ்சத்தில் 2 கோடிப்பேர் பாதிப்பு

ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் இரண்டு கோடிப்பேரை காப்பதற்கான காலம் கடந்துகொண்டிருப்பதாக உதவி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

நைஜீரியா, தென்சூடான், யேமன் மற்றும் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி கடந்த அறுபது வருடங்களில் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா கூறுகின்றது.

சோமாலிய மோதல்களும், ஊழலும், அங்கு இருவருடமாக காணப்படும் வறட்சியை மோசமாக்கியுள்ளன.

மூன்று கோடி மக்களை தண்ணீர், உணவு கிடைக்காத மற்றும்

இலகுவில் தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் நிலைக்கு இவை ஆளாக்கியுள்ளன.

இதில் வரும் சில காட்சிகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.