பாகிஸ்தான்: ஆண்டுக்கு 1200 சட்டவிரோத சிறுநீரகங்கள் விற்பனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான்: ஆண்டுக்கு 1200 சிறுநீரகங்கள் விற்பனை

உலக அளவில் தானமாக அளிக்கப்படும் சிறுநீரகங்களின் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தானில் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானில் மாதந்தோறும் சுமார் 100 சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடப்பதாகவும் ஒரு நோயாளிக்கு 50,000 முதல் 60,000 அமெரிக்க டாலர் வரை செலவாவதாகவும் பாகிஸ்தான் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையம் தெரிவிக்கிறது.

ராவல்பிண்டி நகரில் நடந்துவந்த மிக மோசமான சிறுநீரகத்திருட்டை காவல்துறையினர் சென்ற ஆண்டு கண்டுபிடித்தனர்.

வேலை கொடுப்பதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட இருபத்தைந்து பேர் அவர்களிடமிருந்து சிறுநீரகங்களை எடுக்கும் நோக்கில் பலவந்தமாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

அந்த வழக்கின் பின்னணியையும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையையும் நேரில் சென்று ஆராய்ந்தது பிபிசி.