பிள்ளைகளின் பிரம்படிக்கு நீதிமன்றம் தடை; பெற்றோர் எதிர்ப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிள்ளைகள் மீதான பிரம்படிக்கு நீதிமன்றம் தடை; பெற்றோர் எதிர்ப்பு

ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு நீதிமன்றம் விதித்துள்ள சமீபத்திய தடை சிறார்களுக்க்கான புதியதொரு சகாப்தம் என்று ஐநாவின் சிறாருக்கான அமைப்பு வரவேற்றுள்ளது.

ஜிம்பாப்வேயின் பள்ளிகளிலோ, வீடுகளிலோ, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகளை அடிப்பது நாட்டின் உச்சநீதிமன்ற சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்துள்ள ஹராரேவிலுள்ள நீதிமன்றம், சிறாரை அடிப்பது சட்டவிரோத செயல் என்று அறிவித்திருக்கிறது.

ஆனால், குழந்தைகளை அடிக்காமல் அவர்களை ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும் வளர்க்க முடியாது என்று கூறும் பெற்றோர்களில் சிலர் இதை எதிர்க்கிறார்கள்.