டிரம்பின் வருமானவரி விவரங்களை வெளியிட்ட தொலைக்காட்சி மீது அதிபர் மாளிகை சாடல்

கடந்த 2005-ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு செலுத்திய வருமானவரி விவர அறிக்கை என இரண்டு பக்கங்களை கொண்ட தகவல்களை அமெரிக்க தொலைக்காட்சி எம்எஸ்என்பிசி குழுமம் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP

தனக்கு இந்த விவரங்கள் பெயர் குறிப்பிடப்படாத நபரிடமிருந்து தபால் மூலம் கிடைத்ததாக, இது தொடர்பாக எம்எஸ்என்பிசி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த செய்தியாளராரான டேவிட் கே ஜான்ஸ்டன் தெரிவித்தார்.

150 மில்லியன் டாலர்களுக்கும் மேலான தனது வருமானத்தின் மீது வருமான வரியாக 38 மில்லியன் டாலர்களை அதிபர் டிரம்ப் செலுத்தியதாக வெள்ளை மாளிகை அலுவலகம் இது தொடர்பாக பதிலளித்துள்ளது.

சட்டத்தை மீறி டிரம்பின் வருமான வரி விவரங்களை வெளியிட்டதாக எம்எஸ்என்பிசி தொலைக்காட்சி மீது அதிபர் அலுவலகம் மேலும் குற்றம்சாட்டியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்