ஆஸ்திரேலிய கடற்கரையில் வினோதம்: கடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம்

ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் உருவாகியுள்ள ஒரு பெரும் கடற்பாசிப் பெருக்கம், பிரகாசமாக ஒளிரும் நீல பகுதியாக அக்கடற்கரையை மாற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை BRETT CHATWIN
Image caption கடலை ஒளிரும் நீல நிறமாக மாற்றி விட்ட பாசிப்பெருக்கம்

'சீ ஸ்பார்க்கில்' என்றழைக்கப்படும் ஒளியை உற்பத்தி செய்து உமிழும் பாசி, டாஸ்மேனியாவின் பாதுகாப்பு விரிகுடா பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தன்னை தற்காத்துக் கொள்ளும் விதமாக இந்த சிறிய உயிரினங்கள் ஒளியை உமிழ்வது ஒரு இயற்கையான செயல்பாடாக அமைவதாக இது குறித்து ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார். இவ்வகை பாசிகள் அமைதியாக தோன்றும் ஆழ் கடல் பகுதியில் காணப்படுகின்றன.

இவை விஷத் தன்மை கொண்டவை இல்லையெனினும், சிலருக்கு இவ்வகை பாசிகள் தோல் எரிச்சலை உண்டாக்கக் கூடும்.

படத்தின் காப்புரிமை BRETT CHATWIN
Image caption 'விஷ தன்மை இல்லையெனினும், இவ்வகை பாசிகள் தோல் எரிச்சலை உண்டாக்கக் கூடும்'

தன் வீட்டின் அருகே கண்ட இந்த கண்கவர் காட்சியை புகைப்படம் எடுத்த பிரட் சாட்வின் இது குறித்து விவரிக்கையில், ''மொத்த விரிகுடா பகுதியுமே பிரகாசமான நீல வண்ணமயமாக அமைந்து இருந்தது'' என்று தெரிவித்தார்.

''நான் அந்தக் காட்சியை பார்த்து அசந்து விட்டேன். இது ஒரு அற்புதமான காட்சியாக தோன்றியது'' என்று அவர் மேலும் வர்ணித்தார்.

டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹாலிஃகிராப், இவ்வகை பாசிகள் உணவு சங்கிலி முறையை சிதைப்பதாக அமையலாம் என்று தெரிவித்துள்ளார்.

''தூசியை உறிஞ்சி எடுக்கும் இயந்திரம் போல நடந்து கொள்ளும் ஒரு மிகப்பெரிய பாசிப்பெருக்கம் தோன்றினால், அது அனைத்தையும் உணவாக தின்று விடும்'' அன்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்