நியூசிலாந்தில் விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை

  • 17 மார்ச் 2017

நியூசிலாந்து நாட்டின் போக்குவரத்து மிகுந்த ஆக்லாந்து விமானநிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடைஞ்சலாக இருந்த ஒரு போலிஸ் மோப்ப நாயை போலிசார் சுட்டுக்கொன்றனர்.

பத்து மாத வயதான , தாடி போன்ற முடி கொண்ட கோலி மற்றும் குறைந்த முடி கொண்ட ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான கிறிஸ் என்று பெயர்கொண்ட இந்த நாயை காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற பிறகு, அங்கு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின.

படத்தின் காப்புரிமை AVSEC

அந்த நாய் குட்டி வெடிபொருட்களை கண்டறிய பயிற்சி கொடுக்கப்படும் வேளையில் ஆக்லாந்து விமான நிலையத்தில் வேறு இடத்திற்கு ஓடிவிட்டது.

மூன்று மணி நேரமாக நாய்க் குட்டி விமான ஓடுபாதையில் அலைந்ததால், 16 உள்நாட்டு பயணம் மற்றும் வெளிநாட்டு பயண விமானங்கள் புறப்படுவது பாதுகாப்பு காரணங்களுக்காக தாமதமாகியது .

நாய் குட்டியை மீண்டும் அழைத்துவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த நாய் மிகவும் மன உளைச்சலில் இருந்தது, யாரும் அதை நெருங்க முடியாதது போல் இருந்த காரணத்தால்தான் அது சுடப்பட்டது என நியூசிலாந்து விமான பாதுகாப்பு சேவையின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்