எரிமலையில் அகப்பட்ட பிபிசி குழு: நூலிழையில் உயிர் தப்பினர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எரிமலையில் அகப்பட்ட பிபிசி குழு: நூலிழையில் உயிர் தப்பினர்

இது மிக அழகுதான் , ஆனால் அதி பயங்கரமும் கூட. இத்தாலியின் சிசிலி தீவின் எட்னா எரிமலை திடீரென வெடித்து கொதிக்கும் எரிமலைக் குழம்பை இருநூறு மீட்டர்கள் உயரத்துக்கு வானில் விசிறியடித்தது.

கடந்த சில நாட்களாக இந்த எரிமலை ''குழம்பை'' கக்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அது பெரிதாக வெடித்துச் சிதறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

பத்து பேர் இதனால் காயமடைந்தனர், ஆனால் பெரியகாயமில்லை.

அந்த நேரத்தில் பிபிசியின் அறிவியல் நிருபர் உட்பட எமது பிபிசி குழு ஒன்றும் அங்குதான் இருந்தது.