ஹஜ் யாத்திரை: சவுதி - இரான் சமரசம்

  • 17 மார்ச் 2017

இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் இரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த வருடம், இரான் யாத்ரிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், தங்கள் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு செல்வதை இரான் அதிகாரிகள் தடுத்தனர்.

2015 ஆம் ஆண்டு ஹஜ் புனித தலத்தில் நடைபெற்ற விபத்தில் பலர் பலியாகினர்; அதில் நூற்றுக்கணக்கான இரானியர்களும் அடங்குவர்.

சவுதி அரேபியா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் ராஜிய உறவுகள் நல்ல நிலையில் இல்லை. மேலும் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல்களில் அவை இரண்டும் வெவ்வேறு தரப்புகளை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்