மூடப்படுகிறது யானைகளின் முதல் மருத்துவமனை

படத்தின் காப்புரிமை Getty Images

நிதிப்பற்றாக்குறையால், தாய்லாந்தில் உள்ள, யானைகளுக்கான உலகின் முதல் மருத்துவமனையை மூடப்போவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வடக்கு தாய்லாந்தில் உள்ள அந்த மையம் அவசர கால நன்கொடை கோரியிருந்தது மேலும் திவால் ஆவதிலிருந்து தடுக்க தாய்லாந்து அரசின் உதவியையும் கோரியுள்ளது.

1993 ஆம் ஆண்டு அது தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 5000 யானைகளை அது பராமரித்து கொண்டு வந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு யானைகளுக்கான செயற்கை கால்களை உருவாக்கியதில் சர்வதேச கவனிப்பை அந்த மையம் பெற்றது.

சுற்றலா பயணிகளை கவருவதில் தாய்லாந்து யானைகள் மிகவும் புகழ்பெற்றவை; ஆனால் அவை அடிக்கடி மோசமாக நடத்தப்படுகின்றன மற்றும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்