அமெரிக்கா: 8 நாடுகளின் விமானப் பயணிகள் மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை

எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணிணினி மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நடவடிக்கை 10 விமான நிலையங்களில் இயங்கும் ஒன்பது விமான சேவைகளை பாதிக்கும் என அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பின் புதிய தடையுத்தரவு: நீதிமன்றங்கள் ஏற்குமா?

டிரம்பின் புதிய பயணத்தடை திட்டத்துக்கும் தடை

டிரம்ப் பயணத்தடையை எதிர்த்து ஆப்பிள், ஃபேஸ்புக் உள்பட 100 நிறுவனங்கள் கூட்டு வழக்கு

இதில் மின்னனு சாதனங்களான மடிக்கணினி, டேப்லட்ஸ், கேமராக்கள், டிவிடி சாதனம் மற்றும் மின்னனு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் அலைபேசிகள், தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

உள்நாட்டு பாதுகாப்பு துறை, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது; ஆனால் இன்று செவ்வாய்க்கிழமையன்று இதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தடை கடந்த சில வாரங்களாகவே பரிசீலனையில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்