தென்கொரிய அதிபரும் தோழியும் தொழிலதிபர்களும்...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்கொரிய முன்னாள் அதிபரும் தோழியும் தொழிலதிபர்களும்...

பதவிபறிக்கப்பட்ட தென்கொரிய அதிபர் பார்க் கன் ஹே, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான அரசதரப்பு வழக்கறிஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் வந்தார்.

அப்போது அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்.

இந்த மாத துவக்கத்தில் நாடாளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்ட பின் அவர் வெளியில் வந்து மக்களிடம் பேசுவது இதுவே முதல் முறை.

அதிபரும், அவரது தோழியும் தென் கொரிய நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் பலரும் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறாரகள்.

தென்கொரிய அரசியலை உலுக்கிவரும் ஊழல் புகார்களின் பின்னணி குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு.